முன்ஜாமீன் தராத மதுரை கோர்ட்! சுப்ரீம் கோர்ட்டில் புஸ்ஸி ஆனந்த் முயற்சி!

Prasanth K

ஞாயிறு, 5 அக்டோபர் 2025 (11:17 IST)

மதுரை கோர்ட்டில் முன் ஜாமீன் கிடைக்காத நிலையில் புஸ்ஸி ஆனந்த் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக நடத்திய பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தவெக மாவட்ட நிர்வாகிகள் இருவர் மீது கரூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைதும் செய்துள்ளது.

 

அதுமட்டுமல்லாமல் இந்த சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொ.செயலாளர் நிர்மல் குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

 

இதுதொடர்பாக முன் ஜாமீன் கேட்டு புஸ்ஸி ஆனந்த் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு அளித்த நிலையில், அது நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது புஸ்ஸி ஆனந்த் உச்சநீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு அளித்துள்ளார். அதேசமயம் அவர் எங்கே பதுங்கியுள்ளார் என தனிப்படை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்