71 நாடுகளில் கூகுள் அறிமுகம் செய்த AI வீடியோ உருவாக்கும் மாடல்.. இந்தியாவில் மட்டும் இல்லாதது ஏன்?

Mahendran

திங்கள், 26 மே 2025 (13:16 IST)
கூகுள் தனது Veo 3 செயற்கை நுண்ணறிவு வீடியோ உருவாக்கும் மாடலை 71 நாடுகளுக்கு அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.  Gemini செயலி மற்றும் அதன் வலைத்தளத்தில் இந்த புதிய AI மாடல் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் Veo 3 மாடல் Geminiயின் பிரிமியம் சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
 
கடந்த வாரம் நடைபெற்ற Google I/O 2025 நிகழ்வில் Veo 3 அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் புதிய மேம்பாடுகள் மற்றும் உள்ளமைக்கப்பட்ட ஆடியோ உருவாக்கும் திறன் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.
 
Google Labs மற்றும் Gemini துணைத் தலைவர் ஜோஷ் வுட்வர்ட் X தளத்தில் வெளியிட்ட பதிவில், Veo 3 மாடல் தற்போது 71 புதிய நாடுகளில் கிடைக்கும். ஆனால் இந்த 71 நாடுகள் பட்டியலில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இங்கிலாந்து மற்றும் இந்தியா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவில் Veo 3 எப்போது கிடைக்கும் என்று ஒருவர் கேள்வி எழுப்ப, வுட்வர்ட், “இந்தியாவிலும் விரைவில் கொண்டு வர முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம்!” என்று பதிலளித்தார்.
 
Veo 3-க்கு அனுமதி பெறும் நாடுகளில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, ஜப்பான், கென்யா, மலேசியா, நேபாளம், நியூஸிலாந்து, பாகிஸ்தான், சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, இலங்கை, அமெரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகியவை அடங்கும்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்