பக்ராம் விமானதளத்தை குடுத்துடுங்க..! தலிபானை மிரட்டும் ட்ரம்ப்! - சீனாவுக்கு ஸ்கெட்ச்சா?

Prasanth K

ஞாயிறு, 21 செப்டம்பர் 2025 (09:11 IST)

ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமான தளத்தை கேட்டு ட்ரம்ப் தாலிபானை மிரட்டி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அமெரிக்க அதிபராக முன்னர் ட்ரம்ப் இருந்தபோது ஆப்கானிஸ்தான் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப்படைகளை திரும்ப பெறுவதாக ட்ரம்ப் அறிவித்ததை தொடர்ந்து தாலிபான் அமைப்பினர் ஆப்கானிஸ்தானை கைப்பற்றினர்.

 

இந்நிலையில் தற்போது மீண்டும் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள ட்ரம்ப் விதித்த வரிவிதிப்பு சீனாவை சீண்டியுள்ளது. பதிலுக்கு காந்த கனிமங்களை அமெரிக்காவிற்கு அளிப்பதில் கட்டுப்பாடு உள்ளிட்டவற்றை விதித்து அமெரிக்காவை ஆட்டம் காண வைத்து வருகிறது சீனா.

 

இதனால் சீனாவிற்கு செக் வைக்க வாய்ப்பு கிடைக்காதா என தவித்து வந்த ட்ரம்ப் கண்ணில் ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமானதளம் சிக்கியுள்ளது. இந்த விமான தளம் சீனாவின் ஆயுத தயாரிப்பு மையத்திற்கு அருகே அமைந்துள்ளது. முன்னதாக அமெரிக்க ராணுவத்தில் கட்டுப்பாட்டில் இருந்த அந்த விமான தளத்தை மீண்டும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் அளிக்க வேண்டும் என தாலிபானை எச்சரிக்கத் தொடங்கியுள்ளார் ட்ரம்ப்.

 

அந்த விமான தளத்தை கைப்பற்றினால் சீனாவிற்கு குடைச்சல் தரலாம் என ட்ரம்ப் முயற்சி செய்வதாக கூறப்படும் நிலையில், சீனா முந்திக் கொண்டு ஆப்கானிஸ்தானுடனான நட்பை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்