ஆப்கானிஸ்தானின் தலிபான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாகிஸ்தானின் ஆளில்லா ட்ரோன் விமானங்கள் நங்கர்ஹர் மற்றும் ஹோஸ்ட் மாகாணங்களில் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் மூன்று அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததுடன், ஏழு பேர் பலத்த காயமடைந்துள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் வீடுகளும் சேதமடைந்துள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.