மலேசியாவில் நிர்வாணமாக நின்ற ஆஸ்திரேலியர்கள்

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2016 (18:06 IST)
மலேசியாவில் நடைப்பெற்ற பார்முலா 1 கார் பந்தயத்தின்போது நிர்வாணமாக நின்று சர்ச்சையை ஏற்படுத்தியதாக காவல்துறையினர் 9 பேரை கைது செய்துள்ளனர்.


 

 
மலேசியாவில் கடந்த சில நாட்களுக்கு முன் பார்முலா 1 கார் பந்தயம் நடைப்பெற்றது. அதற்கு வருகை தந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 9 பேர் பொது இடத்தில் குடித்துவிட்டு நிர்வாணமாக நின்றதுடன், மலேசிய நாட்டு கொடியை அவமதித்ததாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
 
இவர்களின் இத்தகைய செயல்களுக்கு சமூக வலைதளங்களில் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரு நாட்டை விட்டு அடுத்த நாட்டுக்குச் சென்று அங்கு பொது இடத்தில் நாகரிகமற்ற முறையில் நடந்து கொண்டதுடன், அந்நாட்டு கொடியை அவமதித்தது மிகப் பெரிய தவறு. 
 
உள்நாட்டினர் மற்றும் வெளிநாட்டினர் இத்தகைய செயல்களில் ஈடுப்படுவது கண்டிகத்தக்கது.
அடுத்த கட்டுரையில்