ஆஸ்திரேலியா: 20-வது மாடியில் இருந்து கைக்குழந்தையுடன் கீழே குதித்து இந்தியப் பெண் தற்கொலை

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2016 (18:05 IST)
ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள 29 மாடிகளை கொண்ட அடுக்கு குடியிருப்பில் இருந்து கைக்குழந்தையுடன் கீழே குதித்து இந்தியப் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


 
தெலுங்கானா மாநிலம் ஹைதெராபாத் சந்தன்நகரை சேர்ந்தவர் கன்னாராம் ஸ்ரீநிவாஸ். இவர், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள பிரபல நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை பொறியாளராக பணியாற்றி வருபவர். இவர் தனது மனைவி சுப்ரஜா (31), மகள் (5)  மற்றும் நான்குமாத ஆண்  குழந்தையுடன் இங்குள்ள ஆஸ்திரேலியா நாட்டில் விக்டோரியா பகுதியில் உள்ள  29 மாடிகளை கொண்ட அடுக்கு குடியிருப்பில் வசித்து வந்தார்.  

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை 20-வது தளத்தில் இருக்கும் அவரின் வீட்டின் பால்கனியில் இருந்து சுப்ரஜா கைக்குழந்தை ஸ்ரீஹனுடன் கீழே குதித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திலே இருவரும் பரிதாபமாக மரணமடைந்தனர். தற்கொலைக்கான காரணத்தை சுப்ரஜாவின் குடும்பத்தினர் கூற மறுக்கின்றனர்.
 
 
 
அடுத்த கட்டுரையில்