அர்ஜென்டினா கால்பந்து போட்டியில் மோதல்...

Webdunia
வெள்ளி, 7 அக்டோபர் 2022 (22:06 IST)
அர்ஜென்டினாவில் உள்ளூர் கால்பந்து போட்டியின்போது மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் இந்தோனேஷியாவில்  நடந்த கால்பந்து போட்டியின்போது, மோதல் ஏற்பட்டது. இது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்  நேற்று  அர்ஜெண்டினாவில் நடந்த  கால்பந்து விளையாட்டின் போது மோதல் ஏற்பட்டது.

அர்ஜெண்டினாவில்  நேற்றிரவு உள்ளூர் கால்பந்து போட்டி நடந்து கொண்டிருந்தது. பொதுவாகவே மேற்கு உலக நாடுகளில் கால்பந்து விளையாட்டிற்கு ரசிகர்கள் அதிகம் என்பதால், இப்போட்டியைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் குவித்தனர்.

இந்த நிலையில், மைதானம் ஹவுஸ்புல் ஆனதால், ரசிகர்களை உள்ளே விடவில்லை போலீஸார்.  ரசிகர்கள் ஆரவாரம் செய்தபோது, அவர்களை சரிப்படுத்தும் முயற்சியில் போலீசார் இறங்கினர்.

அப்போது, போலீசாருக்கும் ரசிகர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.  போலீஸார் கூட்டத்தைக் கலைக்க கண்ணீர்புகை குண்டுகள் வீசினர்.இந்த வன்முறையில் ரசிகர் ஒருவர் பலியானார்.

இந்த மோதல் சம்பவத்தின் காரணமாக நேற்றைய போட்டி நிறுத்ததப்பட்டு, வர்கள் பத்திரமாக அறைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்