டெல்லியை விட மூன்று மடங்கு பெருசு; உலகை அச்சுருத்தும் அண்டார்டிகா பனிப்பாறை!

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (15:49 IST)
புவி வெப்பமயமாதல் அதிகரித்துள்ள நிலையில் அண்டார்டிகாவில் பெரும் பனிப்பாறை ஒன்று உடைந்துள்ளதால் பல நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் குறித்து பல்வேறு நாடுகளும் கவலை தெரிவித்து வரும் நிலையில், இதற்காக பல்வேறு நாடுகளும் இந்த சிக்கலை தீர்ப்பது குறித்து பேரரங்குகளை நடத்தியும் வருகின்றன. ஆனாலும் ஒரு தெளிவான தீர்மானம் எடுக்கப்படாத நிலையில் அண்டார்டிகாவில் ஏற்பட்டுள்ள பனிப்பிளவு விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புவிவெப்பமயமாதலால் தென், வட துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் உருக தொடங்கினால் பல நகரங்கள் மூழ்கும் அபாயம் ஏற்படும் என ஏற்கனவே விஞ்ஞானிகள் எச்சரித்து வந்தனர். இந்நிலையில் அண்டார்டிகாவில் 4,320 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பனிப்பாறை உடைந்து கடலில் மிதக்க தொடங்கியுள்ளது. டெல்லியை விட மூன்று மடங்க பெரிய நிலபரப்பு அளவிலான இந்த பனிப்பாறை உருகினால் கடல் மட்டம் வேகமாக உயரும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்