கடலில் மிதக்கும் மிகப்பெரிய பனிப்பாறை… டெல்லியை விட மூன்று மடங்கு பெரியதாம்!

வெள்ளி, 21 மே 2021 (09:08 IST)
அண்டார்டிகாவில் பனிப்பாறை ஒன்று கடலில் மிதப்பதாக செய்திகள் வெளியாகி சூழலியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

உலகின் தென் பகுதி கண்டமான அண்டார்டிகாவில் பல பனிப்பாறைகள் கடலிலும் நிலத்திலும் உள்ளன. இந்த பனிப்பாறைகள்தான் உலகை வெப்பமயதாலலில் இருந்து தடுக்கின்றன. ஆனால் இவை கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்துள்ளது சூழலியலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் இப்போது 4,320 சதுர கிலோ மீட்டர் அளவுள்ள மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று உடைந்து கடலில் மிதந்து வருகிறது. இது நமது நாட்டின் தலைநகர் டெல்லியை விட மூன்று மடங்கு பரப்பளவு அதிகம் கொண்டதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்