பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு.. அமெரிக்க பெண்ணுக்கு அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 9 அக்டோபர் 2023 (15:52 IST)
கடந்த சில நாட்களாக நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது என்பதும் ஏற்கனவே இயற்பியல். வேதியியல். அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

2023 - 24 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு கிலாடியா கோல்டின் என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் குறித்த புரிதலை மேம்படுத்தியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கி கௌரவம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

கிளாடியா கோல்டி என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்பதும் கடந்த பல ஆண்டுகளாக இவர் பொருளாதார நிபுணராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

பெண் தொழிலாளர்களின் சந்தை விளைவுகள் பற்றிய புரிதலை தனது ஆய்வின் மூலம் மேம்படுத்தியுள்ளார் இவர் என்பதும் அதற்காகத்தான் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

வேலைவாய்ப்பில் பெண்களை பாதிக்கும் காரணிகள், ஊதிய பாகுபாடு குறித்த மேம்பட்ட ஆய்வுகளை இவர் செய்துள்ளார். பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு  கிளாடியா கோல்டன் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது சரியான தேர்வு என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து வருகின்றன. மேலும் அவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்