இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கொரோனா தடுப்பூசியில் முக்கிய பங்கு வகித்த அமெரிக்காவைச் சேர்ந்த கட்டாலின் கரிக்கோ, ட்ரூ வைஸ்மேன் ஆகிய இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இயற்பியலுக்கு மூன்று பேர் நோபல் பரிசு பெற்றனர். அதேபோல் வேதியலில் , குவாண்டம் புள்ளிகள் தொடர்பான ஆய்வுக்காக பணிபுரிந்த மவுங்கி பவெண்டி, லூயிஸ் புரூஸ், அலெக்சி எகிமோவா ஆகிய மூவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது.
இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படிம் ஈரான் நாடிட்ல் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி, பலமுறை சிறை சென்ற நர்கீஸ் முகமததிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.