கழிவறையை சுத்தம் செய்ய கூட தகுதியில்லாதவர் டிரம்ப்; அமெரிக்க ஊடகம் காட்டம்

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2017 (07:44 IST)
அமெரிக்க பத்திரிகை டிரம்ப்பை  கடுமையாக விமர்சித்து ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது.
ஹிலாரி கிலிண்டனும், டொனால்ட் டிரம்பும் அதிபர் பதவிக்கு போட்டியிட்டனர். அதிபர் பதவிக்கான பிரச்சாரத்தின் போதே டிரம்ப்பின் மீது பல பெண்கள் பாலியல் புகார் அளித்தனர். இருந்த போதிலும் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் அமெரிக்க அதிபராக ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றதிதிலிருந்தே மக்களுக்கு எதிரான பல திட்டங்களை கொண்டு வந்தார். இதனால் அந்நாட்டு மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகினர். 
 
இந்நிலையில் அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான யு.எஸ்.டுடே, டிரம்ப் அதிபர் பதவிக்கு சிறிதும் தகுதியில்லாதவர் என்றும் முன்னாள் அதிபர் ஒபாமாவின் அலுவலக கழிவறையை சுத்தம் செய்வதற்கும், முன்னாள் அதிபர் டபிள்.யு.புஷ்ஷின் சூவை பாலிஷ் போடுவதற்கும் கூட லாயக்கில்லாதவர் என கடுமையாக விமர்சித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்