அணு ஆயுதத்தை வைத்து உலகையே மிரட்ட துடிக்கும் வடகொரியா

புதன், 13 டிசம்பர் 2017 (13:35 IST)
உலகின் வலுவான அணு ஆயுத சக்தி கொண்ட நாடாக வடகொரியாவை மாற்றுவேன் என வடகொரியா அதிபர் தெரிவித்துள்ளார்.

 
வடகொரியா தொடர்ந்து சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களை சோதனை செய்து வருகிறது. தங்களின் இலக்கு அமெரிக்கா மீது அணு ஆயுதங்களை செலுத்துவது என கூறி வருகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் மூன்றாம் போர் வெடிக்கும் அபாயம் உள்ளது. 
 
அண்மையில் வடகொரியாவை எச்சரிக்க அமெரிக்க தென் கொரியவில் அந்நாட்டு ராணுவத்துடன் இணைந்து போர் ஒத்திகை நடத்தியது குறிப்பிடத்தக்கது. வடகொரியா மீது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் பொருளாதார தடைகளை அமல்படுத்தியது. இருந்தும் வடகொரியா எந்த சட்ட திட்டத்துக்க்கும் கட்டுபடாமல் தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
 
குறிப்பாக வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் வடகொரியா அதிபர், வலுவான அணு சக்தியை வெற்றிகரமாக முன்னெடுத்து சென்று உலகின் சக்தி வாய்ந்த அணு ஆயுத ராணுவ வலிமை மிக்க நாடாக மாறுவோம் என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்