காசாவில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனே தெற்கு எல்லைக்கு செல்லுங்கள்.. தூதரகம் அறிவுறுத்தல்..!

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2023 (10:17 IST)
காசாவில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனே தெற்கு எல்லைக்கு செல்லுங்கள் என  அமெரிக்கா தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
 
 காசா - எகிப்து இடையிலான ராஃபா கிராசிங் இன்று திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இன்று காலை 11.30 மணிக்கு திறக்கப்படும் என தகவல் வெளியானதால் காசாவில் இருந்து வெளியேற விரும்பும் வெளிநாட்டினர் தெற்கு எல்லையில் தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
ராஃபா எல்லை வழியே மனிதாபிமான உதவிகள் காசாவிற்குள் கொண்டு செல்லப்படும் என்றும், காசாவில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக தெற்கு எல்லைக்கு செல்ல வேண்டும் என்றும் அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. 
 
அமெரிக்காவை போலவே காசாவில் இரட்டைக் குடியுரிமை உள்ள மக்கள் எல்லைக்கு செல்ல சம்பந்தப்பட்ட தூதரகங்கள் அறிவுறுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் ஹமாசைக் கண்டிப்பாக இஸ்ரேல் அழிக்க வேண்டும், ஆனால் அதே நேரத்தில் காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது மிகப்பெரிய தவறு  என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். மேலும் இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் இஸ்ரேலுக்கு உறுதுணையாக அமெரிக்கா நிற்கும் என கூறிய பைடன், இஸ்ரேலுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதுடன் சுதந்திர பாலஸ்தீனத்திற்காகவும் குரல் கொடுத்து வருகிறார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்