க்ரீன்லாந்து தீவை அமெரிக்கா வாங்குகிறதா? வெளியுறவுத்துறை அமைச்சர் பதில்

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (13:05 IST)
க்ரீன்லாந்து தீவை அமெரிக்கா வாங்குகிறதா? வெளியுறவுத்துறை அமைச்சர் பதில்
டென்மார்க் நாட்டின் வசமுள்ள கிரீன்லாந்து தீவை அமெரிக்கா வாங்க விரும்பவில்லை என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் திட்டவட்டமாக கூறியுள்ளார் 
 
அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்தபோது டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பிரதேசமான கிரீன்லாந்து தீவை வாங்க முயற்சி செய்தார். ஆனால் டென்மார்க் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. டிரம்ப்பின் இந்த விருப்பம் பைத்தியக்காரத்தனம் என்று டென்மார்க் அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தது இதன் காரணமாக டென்மார்க் சுற்றுப் பயணத்தை டிரம்ப் ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரின் பிளின்கன் விரைவில் டென்மார்க் செல்ல உள்ளார். அப்போது டென்மார்க்கை சேர்ந்த கிரீன்லாந்து தீவை அமெரிக்கா இன்னமும் வாங்க ஆர்வம் காட்டுகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் திட்டவட்டமாக ’இல்லை’ என்று தெரிவித்தார் 
 
கடந்த 1946-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரூமன் 100 மில்லியன் அமெரிக்க டாலருக்கு கிரீன்லாந்து தீவை வாங்க முயற்சி செய்ததாகவும் ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகவும் கூறப்பட்டு வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்