வட கொரியாவிற்கு நிதி உதவி: ஆனால்... செக் வைக்கும் அமெரிக்கா...

Webdunia
சனி, 12 மே 2018 (11:48 IST)
வட கொரியாவின் அணு ஆயுத சோதனைகள் அமெரிக்கா மற்று உலக நாடுகளின் விமர்சனங்களுக்கு உள்ளானது. அதோடு பல பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டது.  
 
இந்நிலையில், தென் கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டி இதனை அனைத்தையும் மாற்றியது. அணு ஆயுதங்களை மொத்தமாக கைவிட வடகொரியா முடிவு செய்துள்ளது.  
 
இந்த முடிவுக்கு பின்னர், அமெரிக்கா மற்றும் வடகொரியா மத்தியில் சற்று அமைதி காற்று வீசியது. அதன்பின் இரண்டு நாடுகளிலும் இருக்கும் பிற எதிர்நாட்டு கைதிகளை மாற்றி மாற்றி விடுவித்தனர்.  
 
தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், வட கொரிய அதிபர் கிம் சந்திக்க இருக்கிறார்கள். ஆனால் அதற்கான தேதி, இடம் சொல்லப்படாமல் இருந்தது. இந்த தகவலை டிரம்ப் வெளியிட்டுள்ளார். 
 
ஆம், வரும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி சிங்கப்பூரில் இரு நாட்டு அதிபர்களும் சந்திக்க இருக்கிறார்கள். இந்நிலையில், அமெரிக்கா வட கொரியாவிற்கு நிதி உதவி செய்ய முன்வந்துள்ளது. 
 
அதாவது, வடகொரியா அணு ஆயுதங்களை திருப்பித்தர முன்வந்தால் அந்த நாட்டுக்கு தேவையான நிதியுதவி செய்ய்ப்படும் என அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
 
வடகொரியா மீது அடுத்தடுத்து பொருளாதார தடைகளை விதித்து நெருக்கடிகளை கொடுத்து வந்த அமெரிக்கா தற்போது தானாக முன்வந்து நிதி உதவி அளிப்பதாக தெரிவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்