எக்கி எக்கி காலிங் பெல் அடித்த முதலை... வைரல் வீடியோ!

Webdunia
புதன், 8 மே 2019 (09:54 IST)
வீட்டின் காலிங் பெல்லை அடித்துவிட்டு கதவை திறக்க காத்திருந்த முதலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் மிர்ட்டில் பீச் பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. கரன் அல்பனோ என்பவரின் வீடு அந்த பீச் பகுதியில் இருந்துள்ளது. 
 
சம்பவ நாளன்று ஒரு முதலை கரன் அல்பனோ வீட்டின் காலிங் பெல்லை அடித்துவிட்டு, கதவை திறப்பதற்காக தரையோடு தரையாக படுத்துக் கிடந்துள்ளது. இதை கண்ட அந்த வீட்டின் உறிமையாளருக்கு அதிர்ச்சியாய் இருந்துள்ளது. 
 
முதலை காலிங் பெல்லை அடிக்கும் காட்சி அங்கு இருந்த சிசிடிவி காமராவில் பதிவாகியுள்ளது. இப்போது இது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ அந்த காட்சி...

நன்றி:WSAV3
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்