அந்தவகையில் தற்போது எஸ்.ஜே.சூர்யாவிடம் பணிபுரிந்த வினோ வெங்கடேஷ் இயக்கும் சின்ட்ரல்லா படத்தில் ராய் லட்சுமி நடித்து வருகிறார். திகில் பாணியில் உருவாகிவரும் இப்படத்தின் புரோமோ வீடியோ நேற்று ராய்லட்சுமி பிறந்தநாளையொட்டி வெளியிட்டனர். படக்குழுவினர். இந்த புரோமோ வீடியோ பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
இந்த வீடியோவில் ஒரு அறையின் சுவரில் நிறைய புகைப்படங்கள் மாட்டப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்களுக்கு மத்தியில் சின்ட்ரெல்லாவின் புகைப்படம் ஒன்று இருக்கிறது. பின்னணியில் ஒலிக்கும் குரலில், 'இந்த சின்ட்ரெல்லா புகைப்படம் பல கோடி விலை போகும்' எனும் உரையாடல் கேட்கிறது.
அந்தநேரத்தில் திடீரென கேமரா அதிவேகமாக நகர்ந்து, சின்ட்ரெல்லா போட்டோவுக்கு அருகில் செல்ல, அதில் இருந்து ஒரு பேய் வெளியே வந்து நம்மை பயமுறுத்துகிறது. ஹெட்போனை காதில் மாட்டிக்கொண்டு இந்த வீடியோவை பார்ப்பவர்கள் ஒரு நொடி பயந்துபோவது நிச்சயம்.
பிறகு பழையபடி அந்த பேய் அழகிய சின்ட்ரெல்லாவாக மாறிவிடுகிறது. இந்த புரோமோ வீடியோ பார்த்தவர்கள், பயந்து போய் பிறந்தநாளும், அதுவுமா இப்படி பண்ணுவீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.