மலையாள படத்தை பார்த்து செய்தேன்: மனைவியை கொன்று குக்கரில் சமைத்தவன் வாக்குமூலம்..!

Mahendran

திங்கள், 27 ஜனவரி 2025 (10:45 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னால் மனைவியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி குக்கரில் சமைத்த ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மலையாள படத்தை பார்த்து தான் இவ்வாறு செய்தேன் என அவர் வாக்குமூலம் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ஐதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அவரை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேகவைத்து அதன் பின் ஏரியில் வீசியதாக வீசியது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதுகுறித்து பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார், கணவரின் மீது சந்தேகப்பட்டனர். இதையடுத்து  காவல்துறையினர் அவரிடம் விசாரணை செய்தபோது தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
 
இதனை அடுத்து அவரிடம் வாக்குமூலம் பெற்ற போது மலையாள படமான சூக்ஷ்மதர்ஷினி'  என்ற படத்தை பார்த்துதான் மனைவியை துண்டு துண்டாக வெற்றி குக்கரில் சமைத்தேன்  என்று அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த வாக்குமூலம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்