அண்டார்டிகாவில் ஏலியன்ஸ் ராணுவ படைதளம் : அடுத்து என்ன நடக்கும் ...?

Webdunia
சனி, 5 ஜனவரி 2019 (12:53 IST)
உலகில் உள்ள பல நாடுகளில் அடிக்கடி ஏலியன்கள் குறித்த செய்திகள் அதிரி புதிரியாக வெளியாகும்.  சில சமயங்களில் சிலர் ஏலியன்களை பார்த்ததாகவும் கூட செய்திகளில் படித்திருப்போம். இப்படி கேள்விப்பட்டு, திரட்டிய தகவல்களைக் கொண்டு ஹாலிவுட் இயக்குநர்கள் பல ஹிட் படங்களும் கொடுத்து விட்டனர்.
இந்நிலையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பல கோடிகள் செலவு செய்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
 
தற்போது ஏலியன்கள் ரகசியமாக அண்டார்டிகாவில் ராணுவ தளம் ஒன்று  இயங்கி வருவதாக தகவல் வெளியாகிறது. 
 
அதாவது கூகுள் மேப் உதவியுடன் இது கண்டறியப்பட்டுள்ளது. அண்டார்டிகாவில் மர்மம் நிறைந்த சில இடம் உள்ளதாகவும். அதில் தட்டை வடிவம் போன்று பொருட்கள் உள்ளதாகவும் அண்டார்டிகாவின் முடிவு எல்லையாக இந்தப் பகுதிகள் இருப்பதாகவும் கருதப்படுகிறது.
 
சரியாக இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு (1819) ஆம் ஆண்டில் அண்டார்டிகா கேப்டன் ஜேன்ஸ் குக்கால் கண்டுபிடிக்கப்பட்தாக வரலாறு தெரிவிக்கிறது.
இங்கு இரவு நேரங்களில் சில விநோதமான உருவங்கள் நடமாடுவதாகவும், மேலும் ஏலியன்ஸ் ராணுவ படைதளம் போன்ற சில பொருட்கள் மற்றும் தடயங்கள் கூகுள் மேப்பினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
விண்ணில் தான் ஆச்சர்யங்களுக்குப் பஞ்சமில்லை   என்றால்... மண்ணிலும் அது ஏலியன்ஸ் வடிவில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்றால் மிகையல்ல.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்