காஷ்மீர் பகுதியில் ஒரு சில இடங்களில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஆக்கிரமிப்பு செய்திருந்த நிலையில் தற்போது 250 க்கு மேற்பட்ட ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து சுமார் 27 வழிகளில் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகிறது…
கடந்த 2016 ஆம் ஆண்டில் இந்தியா சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்னும் தாக்குதல் நடத்திய போது 160 ஆக இருந்த பயங்கரவாதிகளின் எண்ணிக்கை பிறகு 190 என்று பெருகி தற்போது 230 என்ற அளவில் அதிகரித்திருக்கிறது.
பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்கும் வரையில் 8 பயங்கரவாத குழுக்கள் லிபா பள்ளத்தாக்கு பகுதியில் உருவாகியுள்ளதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவினுள் ஊடுருவ இஸ்கர் - இ - தொய்பா, மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற பயங்கரவாத அமைப்புகள் இந்திய வனப்பகுதியோரமாக கள ஆய்வுகள் நடத்திவருவதாக இந்திய ராணுவத்திற்கு தகவல் வந்துள்ளது.
எனவே நம் இந்திய ராணுவம் பயங்கரவாதிகளுக்கு எதிராக தன் அடுத்த கட்ட சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் எனப்படும் துல்லியமான தாக்குதல் நடத்த தாயாராகி வருவதாக தெரிகிறது.