AI தொழில்நுட்பம் தற்போது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இன்ஸ்டாகிராம் பயனாளிகளும் இனி அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது பயனர்களுக்கு தேவையான புது புது வசதிகள் கொண்டுவரப்பட்டு வரும் நிலையில் தற்போது இமேஜ் ஜெனரேஷன் என்ற AI தொழில்நுட்பம் கொண்டுவரப்பட்டுள்ளது.
AI மூலம் இயங்கும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு புகைப்படத்தில் உள்ள பின்னணியை மாற்றிக் கொள்ளலாம். குறிப்பாக ஒருவர் உட்கார்ந்து இருப்பது போன்ற புகைப்படத்தில் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் சுற்றி என்ன இருக்க வேண்டும் என்பதை நாமே முடிவு செய்யலாம். அதற்கான கட்டளை மட்டும் கொடுத்து விட்டால் இந்த தொழில்நுட்பம் நாம் சொன்னதை நிறைவேற்றி விடும் .
அதாவது சாதாரணமாக ஒருவர் உட்கார்ந்திருப்பது போன்ற புகைப்படத்தில் பின்னணியில் பொதுமக்கள் இருக்கிறார்கள் அல்லது வாகனங்கள் செல்கிறது என்பது போல் செய்ய வேண்டும் என்றால் இமேஜ் இமேஜெனரேஷன் என்ற AI தொழில்நுட்பம் நமது செய்து கொடுத்துவிடும்.
ஆனால் இப்போதைக்கு இந்த வசதி அமெரிக்காவில் உள்ள இன்ஸ்டாகிராம் பயனாளிகள் மட்டுமே பயன்படுத்த முடியும். இருப்பினும் விரைவில் இந்தியா உட்பட அனைத்து பகுதிகளுக்கும் இந்த தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.