தலீபான்கள் தாக்குறாங்க.. காப்பாத்துங்க! – பாகிஸ்தானில் பதுங்கிய ஆப்கானிஸ்தான் ராணுவம்!

Webdunia
செவ்வாய், 27 ஜூலை 2021 (08:21 IST)
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் ஆப்கன் ராணுவ வீரர்கள் பாகிஸ்தானில் அடைக்கலம் புகுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் முழுவதும் திரும்ப பெறப்பட்ட நிலையில் தலீபான்கள் தாக்குதல் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. பல்வேறு இடங்களை கைப்பற்றிய அவர்கள் தற்போது ஆப்கன் – பாகிஸ்தான் எல்லை பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

தலீபான்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஆப்கன் ராணுவத்தை சேர்ந்த 5 அதிகாரிகள் உட்பட 46 பேர் பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை பாகிஸ்தான் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்