ஹைவோல்டேஜ் டி 20 மேட்ச்… அடித்து துவம்சம் செய்து வெற்றியை ருசித்த பாகிஸ்தான்!

சனி, 17 ஜூலை 2021 (12:00 IST)
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டியில் பாக் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி ஒருநாள் போட்டியை முடித்துவிட்டு இப்போது டி 20 தொடரில் விளையாடி வருகிறது. நேற்று நடந்த முதல் டி 20 போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 232 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் பாபர் ஆசம் 49 பந்துகளில் 85 ரன்களை அதிரடியாக சேர்த்தார். மற்றொரு தொடக்க வீரர் ரிஸ்வான் 63 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கோடு களமிறங்கிய இங்கிலாந்து அணி, ஆரம்பத்தில் வரிசையாக விக்கெட்களை இழந்து சொதப்பியது. அந்த அணியின் லியாம் லிவிங்ஸ்டான் அதிரடியாக 43 பந்துகளில் 103 ரன்கள் சேர்த்து வாணவேடிக்கை காட்டினார். ஆனால் மற்ற வீரர்களிடம் இருந்து போதிய ஆதரவு இல்லாததால் 201 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்