இ விசா மூலமாகவே ஆப்கானிஸ்தானிய மக்கள் இந்தியாவுக்குள் நுழையமுடியும்… இந்திய அரசு அறிவிப்பு!

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (16:49 IST)
தாலிபான்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்நாட்டு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர்.

2000 ஆண்டுகளில் அமெரிக்க கூட்டுப்படைகளுடன் தாலிபன்களின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதன் பின்னர் 20 ஆண்டுகள் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு இருந்த நிலையில் அங்கு தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளின் ஆட்சி நடந்தது. ஆனால் அமெரிக்க படைகள் தாலிபன்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி இப்போது அங்கிருந்து வெளியேறின.

அமெரிக்க படைகள் வெளியேறிய ஒரு மாதத்துக்குள்ளாகவே தாலிபன்கள் முழு ஆப்கனையும் கைப்பற்றி விட்டனர். இந்நிலையில் அங்கிருந்து வெளிநாட்டவர்கள் மற்றும் உள்நாட்டு மக்களே வெளியேற நினைக்கின்றனர். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்தியர்களை அழைத்து வர இந்திய அரசு விமானங்களை அனுப்பி வருகிறது. அந்த விமானங்களில் இந்தியர் அல்லாத ஆப்கானிஸ்தானை சேர்ந்த இந்து மற்றும் சீக்கிய மக்களும் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆனால் அவர்கள் இந்தியாவுக்கு வரவேண்டும் என்றால் இ விசா இருந்தால் மட்டுமே அழைத்து வர முடியும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆப்கன் மக்கள் இதற்காக இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்