தொடக்க வீரர்களாக ராகுலும் ரோஹித்தும் களமிறங்கினர். நான்கு ஓவர்களுக்குள்ளாகவே ராகுல் ரன்கள் எதுவும் எடுக்காமலும் புஜாரா ஒரு ரன்னிலும் நடையைக் கட்டினர். அதன் பின்னர் ரோஹித்தோடு கோலி ஜோடி சேர்ந்து சிறுது நேரம் தாக்குப் பிடித்தார். ஆனால் அவரும் 7 ரன்களில் ஆண்டர்சன் பந்துவீச்சில் பட்லர் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 3 விக்கெட்களையும் ஆண்டர்சனே கைப்பற்றியுள்ளார். கோலி தொடர்ந்து ஆண்டர்சன் பந்தில் அவுட் ஆவது வாடிக்கையாகி வருகிறது.