பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைது அடுத்து அந்நாட்டு பொதுமக்கள் சாலைகளில் பதறி ஓடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீபத்தில் துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரண்டு நாடுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் 40 ஆயிரத்துக்கு அதிகமானவர்களை பலியானது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் துருக்கி நில நடுக்கத்திற்கு பின் இந்தோனேசியா உள்பட ஒரு சில நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் 6.1 என இந்த நிலநடுக்கம் பதிவாகியதால் கட்டிடங்கள் குலுங்கியதாகவும் இதனால் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை என்றும் தற்போது வரை சேதம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.