ஒவ்வொரு 4.5 நாட்களுக்கு கொல்லப்படும் ஒரு பத்திரிக்கையாளர்: பிண்ணனி என்ன?

Webdunia
வியாழன், 3 நவம்பர் 2016 (10:47 IST)
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான (UNESCO), ஒவ்வொரு 4.5 நாட்களுக்கு ஒரு பத்திரிகையாளர் கொல்லப்படுகிறார் என அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது.


 

 
இந்நிறுவனமானது, உறுப்பு நாடுகளிடையே, கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது.
 
இந்நிலையில், ஒவ்வொரு 4.5 நாட்களுக்கு ஒரு பத்திரிகையாளர் கொல்லப்படுகிறார் என யுனெஸ்கோ அமைப்பு ஒர் தகவலை வெளியிட்டுள்ளது.
 
கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 827 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில், பெரும்பாலான சம்பவங்கள் அரபு நாடுகள் மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகளில் நிகழ்ந்துள்ளன. 
 
2006-2015 காலகட்டங்களில் மட்டுமே 59 சதவீதம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதுவும், போர் சூழல் உருவான இடங்களில் கொலை எண்ணிக்கை சற்று அதிகரித்தே உள்ளது. கொல்லப்பட்ட 213 பத்திரிகையாளார்களில் 78 பேர் அரபு நாடுகளை சேர்ந்தவர்கள் (36.5 சதவீதம்). 
 
மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளில் கடந்த ஆண்டில் மட்டும் பத்திரிகையாளர்கள் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
 
வெளிநாடுகளை சேர்ந்த பத்திரிகையாளர்களை விட, உள்ளூர் பத்திரிகையளர்களுக்கே ஆபத்து அதிகம். ஆனாலும், கடந்த ஆண்டில் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
 
அதேபோல், ஆன்லைன் பத்திரிகையாளர்கள் கடந்த ஆண்டில் மட்டும்  21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில், பாதி பேர் சிரிய நாட்டை சேர்ந்த பிளாக் எனும் வலைபக்கத்தில் எழுதும் பத்திரிகையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்