நியூசிலாந்தின் கடல்பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையா?

Webdunia
வியாழன், 16 மார்ச் 2023 (10:34 IST)
நியூசிலாந்து நாட்டின் கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நியூசிலாந்து நாட்டில் உள்ள கெர்மடெக் என்ற தீவில் இன்று காலை 7.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இந்த நிலநடுக்கம் 7.1 என்ற அளவில் ஏற்பட்டுள்ளது.
 
இதனை அடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 10 கிலோமீட்டர் கடல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியிலிருந்து 300 கிலோ மீட்டர் சுற்றளவில் மக்கள் வசிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்