துருக்கியில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன என்பதும் இதில் 50,000 மேற்பட்ட ஒரு பலியாகினார் என்பதும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் துருக்கியில் உள்ள ஒரு கட்டிட த்தின் ஒரு பகுதி மட்டும் இடிந்திருந்த நிலையில் அந்த பகுதியில் இடிபாடுகளை அகற்றும் பணியில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் திடீரென அந்த கட்டிடத்தின் இன்னொரு பகுதியும் இழந்து விழுந்ததால் இரண்டு பேர் அதில் சிக்கிக் கொண்டதாகவும் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் இன்னும் ஒருவரை காப்பாற்ற முயற்சியில் மீட்பு குழுவினர் தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.