9 மாடி குடியிருப்பில் தீ விபத்து: 50 பேர் பலி

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (13:32 IST)
வியட்நாம் தலைநகர் ஹனோயில் 9 அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

வியட்நாம்  நாட்டின் தலைநகர் ஹனோய் நககரில்  உள்ள 9  மாடி கட்டிடத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர்,தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

அதிகாலை 2 மணியளவில் முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்றும்  இத்தீவிபத்தில் 50 பேர் பலியானதாக தகவல் வெளியாகும் நிலையில், 70 பேர் வரை மீட்ககப்பட்டுள்ளதாகவும், 54 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்த அடுக்குமாடி குடியிருப்பில்  150 பேர் வசித்ததாகக் கூறப்படும் நிலையில், தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்