தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர், ஜெயிலர் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் இணைந்து மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கிஷெராப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்க இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்த நிலையில், ரஜினியின் ஜெயிலர் படத்தை முதல் நாள் முதல் காட்சியில் பார்க்க வேண்டி ரசிகர்கள் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் ஆர்வம் செலுத்தி வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புக் மை ஷோ''வில் 290.5 K டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
அதேபோல்,பெங்களூரில் யாஷின் கேஜிஎஃப் 2 பட சாதனையை முறியடித்துள்ளது ஜெயிலர் படம். பெங்களூரில் கேஜிஎஃப் 2 படம் 1037 காட்சிகள் திரையிட்டதே சாதனையாக இருந்த நிலையில், ரஜினியின் ஜெயிலர் படம் 1090 காட்சிகள் திரையிடப்படவுள்ளதால் அந்த சாதனையை முறியடித்துள்ளது.