தீயில் உடல் முழுவதும் எரிந்து, கண்கள் இல்லாத மாணவர்...! தன்னம்பிக்கையின் உச்சம்

Webdunia
வெள்ளி, 25 அக்டோபர் 2019 (18:47 IST)
பள்ளியில் படிக்கும் ஒரு மாணவர் தீயில் எரிந்து காயமடைந்ததை அடுத்து அவர் தன்னம்பிக்கையில் வாழ்ந்துவருகிறார்.
அமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சாசை சேர்ந்தவர் சாயிட் கார்சியா.இவருக்கு இரண்டு வயதாகும் போது, இவர் கம்பளி போர்த்தி படுக்கும்போது, மெழுகினால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அவரது கண் பார்வை பறிபோனது.
 
அதன்பிறகு மருத்துவர்கள் அவர் பிழைப்பது கடினம் என்றனர். ஆனால் கணக்கற்ற ஆபரேசன்களுக்கு பிறகு, தோல்  மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவருக்கு 16 வயது ஆகும்.
 
தற்போது , 80 % உடல் எரிந்த நிலையில் இரண்டு கைகளை இழந்து,கண் பார்வையின்றி வாழ்ந்து வருகிறார் சாயிட் கார்சியா.
 
இவருக்கு கண் பார்வை கிடைக்க முயற்சி நடைபெற்று வருகிறது. மேலும் இந்த ஆபரேசனுக்காக ரூ. 300000 லட்சம் அமெரிக்க டாலர்கள் சேர்ந்து அவருக்கு உதவிசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

மேலும்,சாயிட் கார்சியா தனக்கு பார்வை கிடைத்தால், முதலில் தனது பெஸ்ட்பிரெண்டான  ஜூலியாஅவின் அழகையும், அவரது குடும்பத்தினரையும் பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்