டெக்ஸாஸ், ஓஹியோ துப்பாக்கிச் சூடு பற்றி டொனால்டு டிரம்ப்: "மனநோயால் நடந்தது"
திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (21:19 IST)
அமெரிக்காவில் டெக்சாஸ் மற்றும் ஓஹியோ மாகாணங்களில் நடந்த இரு வேறு துப்பாக்கிசூடு சம்பவங்களில் 29 பேர் பலியாகி உள்ளனர்.
டெக்சாஸ் துப்பாக்கிச்சூடு தொடர்பாக 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். டெக்சாஸில் ஸ்பானிஷ் மக்கள் அதிகம் குடியேறுவதற்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என கூறப்படுகிறது.
ஆனால் இந்த இருசம்பவங்களும் மனநோயால் நடந்துள்ளதாகக் கூறியுள்ளார் டிரம்ப்.
"நடந்த இந்த இரு நிகழ்வுகளுக்கும் காரணம் மனநோய். இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர்கள் மிக மிக மோசமான மனநோய் கொண்டவர்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த இரு நிகழ்வுகளுக்கும் காரணம் குடியேறுபவர்கள் விஷயத்தில் டிரம்ப் நடந்து கொள்ளும் முறையும் துப்பாக்கி கட்டுப்பாட்டை அவர் கொண்டுவர மறுப்பதும்தான் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.