பாத்ருமில் சுரங்கம்: ஜூட் விட்ட 76 அதி பயங்கர கைதிகள்!

செவ்வாய், 21 ஜனவரி 2020 (13:31 IST)
பராகுவே நாட்டில் உள்ள சிறைச்சாலையில் கழிவறையில் ரகசியச் சுரங்கம் அமைத்து 76 அதி பயங்கர கைதிகள் தப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
தென் அமெரிக்க நாடானா பராகுவேவில் பெட்ரொ ஜுயன் கபரிரோ நகரில் சிறைச்சாலை ஒன்று அமைந்துள்ளது. உள்நாட்டுக் கைதிகளை மட்டுமின்றி வெளிநாட்டுக் கைதிகளையும் அடைத்து வைக்கும் முக்கிய சிறைச்சாலையாக இது உள்ளது. 
 
இந்த சிறைச்சாலையில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட முக்கிய குற்றங்களில் ஈடுபட்ட கைதிகள் அடைக்கப்படுகின்றனர்.  இந்நிலையில் இந்த சிறையில் இருந்து 76 கைதிகள் ஒரு கழிப்பறையில் சுரங்கம் அமைத்து தப்பியுள்ளனர். 
தப்பியவர்களில் 40 பேர் பிரேசிலைச் சேர்ந்தவர்கள் எனவும் 36 பராகுவேயைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, சுரங்கம் தோண்டியதில் வந்த மணலை இவர்கள் சுமார் 200 மூட்டைகளாக கட்டி சிறையிலேயே அடுக்கி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்