சீன சுரங்கத்தில் புகுந்த வெள்ளம் – குகைக்குள் சிக்கிய தொழிலாளர்கள்

ஞாயிறு, 15 டிசம்பர் 2019 (10:00 IST)
சீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஊழியர்கள் குகைகளுக்கு சிக்கி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள காங்சியான் கவுண்டி பகுதியில் நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்குள்ள பராங் நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கத்தில் வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென குகைகளுக்குள் நீர் பெருக்கெடுத்து ஓட தொடங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் வெளியே செல்ல முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இதுதவிர மேலும் 14 ஊழியர்கள் வெள்ளம் சூழ்ந்த குகைகளுக்குள் சிக்கி கொண்டிருக்கின்றனர். அவர்களை மீட்க 200க்கும் மேற்பட்ட மீட்பு படையினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வருடம் தாய்லாந்தில் சுற்றுலா சென்ற மாணவர்கள் குழு குகைகளுக்குள் சிக்கி கொண்டதும் அவர்களை ஒரு வாரம் கழித்து உயிருடன் மீட்டதும் குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்