ஃபேஸ்புக் நிறுவனத்தில் ஏற்கனவே 11 ஆயிரம் பேர் சமீபத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அதன் தாய் நிறுவனமான மெட்டாவில் 7000 ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. உலகெங்கும் பொருளாதார மந்த நிலை உள்பட பல்வேறு காரணங்களால் முன்னணி நிறுவனங்களில் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கூகுள் அமேசான் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்களில் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள உள்ளது என்பதும் கடந்த ஜனவரி மாதம் முதல் இரண்டு மாதங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஒரு வேலை நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடப்பட்டது.