சமீப காலமாக உலக பொருளாதார மந்தநிலை காரணமாக பல்வேறு கார்ப்பரேட் மற்றும் ஐடி நிறுவனங்கள் பணியாளர்கள் பலரை பணிநீக்கம் செய்து வருகின்றன. மைக்ரோசாப்ட், கூகிள், அமேசான் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களில் இருந்து சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பிரபலமான மெக்கின்சி நிறுவனமும் பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசுகளுக்கு ஆலோசனை வழங்கும் பணியை இந்த மெக்கின்சி நிறுவனம் செய்து வருகிறது. சில நிறுவனங்கள் பணியாளர்களை பணி நீக்கம் செய்ய சொல்லி பரிந்துரைத்ததே மெக்கின்சி நிறுவனம்தான்.