63.19 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (07:35 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 63.19 கோடியாக அதிகரித்துள்ளது
 
உலகம் முழுவதும் 631,974,177 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,578,738 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 610,776,362 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 14,619,077 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன
 
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 99,037,439 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 1,092,409 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 96,395,778 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,818,774 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 687,544 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 33,993,798 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,638,011 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 528,943 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 44,082,064 என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்