2ஆம் கட்ட பணிநீக்க நடவடிக்கையில் மைக்ரோசாப்ட். இம்முறை எத்தனை பேர்?

செவ்வாய், 28 மார்ச் 2023 (17:57 IST)
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பத்தாயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது மீண்டும் இரண்டாம் கட்ட வேலை நீக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது அந்நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
மைக்ரோசாப்ட் நிறுவனம் மேலும் 559 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ஆனால் அதே நேரத்தில் அமெரிக்காவில் உள்ள அலுவலகத்தில் மட்டுமே இந்த பணி நீக்கம் செய்யப்படும் என்றும் மற்ற நாடுகளில் உள்ள அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் பணிநீக்கம் செய்ய மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளது. 
 
ஏற்கனவே கூகுள் நிறுவனம் இரண்டாம் கட்ட பணி நீக்க அறிவிப்பு வெளியிட்ட நிலையில் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனமும் இரண்டாம் கட்ட பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்