தெற்கு ரயில்வேயின் ஃபேஸ்புக் பக்கம் முடக்கம்!

செவ்வாய், 28 மார்ச் 2023 (17:31 IST)
தெற்கு ரயில்வேயின் ஃபேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் முக்கிய போக்குவரத்தாக ரயில்வே போக்குவரத்துறை உள்ளது. தினமும், ரயில்வழிப் போக்குவரத்து மூலம் லட்சக்கணக்கான மக்கள் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்குச் சென்று வருகின்றனர்.

இதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு உருவாகி வருகிறது. இந்த  நிலையில், இந்தியாவின் முக்கிய ரயில்வேதுறையில் ஒன்றாகத் தென்னக ரயில்வேதுறை இருக்கும் நிலையில், அதன் சமூக வலைதளப் பக்கங்களான டுவிட்டர், பேஸ்புக், மூலம் பயணிகளுக்கு பல அறிவிப்புகள், அறிக்கைகள் பதிவிடுவது வழக்கம்.

இப்பக்கத்தை பல லட்சக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர். இந்த நிலையில், இன்று தென்னரயில்வேதுறையில் ஃபேஸ்புக் பக்கத்தின் முகப்பு புகைப்படத்தை மாற்றி, கார்டூன் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது.

இதை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ள நிலையில், இதை மீட்க தொழில் நுட்ப வல்லுனர்கள் முயற்சித்து வருகின்றனர்.

மேலும், தென்னக ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழக்கம் போல் இயங்கி வருவது துகுறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்