இபே-வில் 5 பவுண்ட், ரூ.1 கோடிக்கு விற்பனை!!

Webdunia
திங்கள், 13 மார்ச் 2017 (16:04 IST)
5 பவுண்ட் நோட்டை ஒருவர் ரூ.1 கோடி கொடுத்து வாங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் தன்னிடம் இருந்த பவுண்ட் தாள்களை பார்த்தபோது அவற்றில் ஒரு 5 பவுண்ட் தாள் மிகவும் அரிதான ஒன்றாக இருப்பதை அறிந்து அதனை இபே தளத்தில் விற்பனை செய்ய தீர்மானித்துள்ளார்.
 
இந்த நோட்டை வாங்குவதற்கு 21 பேர் மத்தியில் கடும் போட்டி நிலவி வந்துள்ளது. இறுதியாக, இந்த நோட்டை ஒருவர் 60,100 பவுண்ட் விலைக்கு வாங்கியுள்ளார்.
 
அந்த நோட்டில் AA01 444444 என்ற அரிதான சீரியல் எண் இருந்ததே இவ்வளவு விலைக்கு காரணமாகும்.
அடுத்த கட்டுரையில்