11 வயது சிறுமியை மணந்த 41 வயது நபர்

Webdunia
திங்கள், 2 ஜூலை 2018 (12:56 IST)
மலேசியாவில் 41 வயது நபர் ஒருவர் தனது மகள் வயதுள்ள 11 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவை சேர்ந்த சே அப்துல் கரீம் (41) என்பவருக்கு 2 மனைவிகளும் 6 குழந்தைகளும் உள்ளனர். அப்துல் கரீமுக்கு இதெல்லாம் பத்தாது தனது மகள் வயதுடைய 11 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்துள்ளார். 
 
இதற்கு அந்நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  18 வயதுக்கு குறைந்த பெண்களை திருமணம் செய்வது மலேசியச் சட்டப்படி குற்றம்.  இஸ்லாமிய சட்டப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டுமானால் குறைந்தது 16 வயதாவது இருக்க வேண்டும். 
 
இதை எதுவுமே பின்பற்றாத அப்துல், இதுகுறித்து பேசிய போது சிறுமியின் பெற்றோர் சம்மதத்தில் தான் திருமணம் செய்துள்ளேன் எனவும் சிறுமி 16 வயது வரை அவரது பெற்றோருடனே இருப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய அந்த சிறுமி அப்துலை விரும்புவதாகவும், அவர் ஒரு நல்ல மனிதர் என்றும் தெரிவித்துள்ளார். சிறுமிக்கு தான் இப்படி பேசுகிறாள் என்றால் அவரது பெற்றோருக்கும் அறிவு இல்லையா என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்