CEO பராக் அகர்வால் vs எலான் மஸ்க் - கருத்து மோதலால் தள்ளாடும் டிவிட்டர்!

Webdunia
புதன், 18 மே 2022 (10:32 IST)
பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் டிவிட்டர் இணையதள பக்கத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து விலைக்கு வாங்கினார். 

 
டிவிட்டர் ஊழியர்கள் பணி நீக்கம்: 
ஆம், கடந்த சில நாட்களுக்கு முன்னர் டிவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கினார். இதனையடுத்து அவர் டிவிட்டரில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 
 
முதல் கட்டமாக டிவிட்டர் நிறுவனத்திற்கான செலவுகளை குறைக்கவும் வருமானத்தை அதிகரிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது. இதற்காக ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்பட்டது.
 
மேலும் டிவிட்டர் நிறுவனம் எலன் மஸ்க் வசம் செல்வதால் அந்த நிறுவனத்தில் இருந்து 2 உயர் அதிகாரிகள் பதவி விலக உள்ளனர். ஆய்வு பிரிவில் பொது மேலாளராக உள்ள கைவோன் பெக்போர், அதிகாரி புரூஸ் பாக் ஆகியோர் வெளியேறுகின்றனர் என தகவல் வெளியாகியது. 
டிவிட்டரில் கட்டணம் வசூல்: 
இதனை அடுத்து டிவிட்டரில் அவர் பல மாற்றங்களை செய்ய இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் திடீரென அரசு சார்ந்த டிவிட்டர் பக்கங்கள் மற்றும் கமர்சியல் ரீதியான டிவிட்டர் பக்கங்களுக்கு கட்டணம் வசூலிக்க இருப்பதாக எலான் மஸ்க் தனது டிவிட்டரில் தெரிவித்தார்.  
 
ஆனால் அதே நேரத்தில் சாதாரண பயனர்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லை என்று அறிவித்தது சற்று நிம்மதியை அளித்தது. மேலும் அரசு சார்ந்த டிவிட்டர் பக்கங்கள் மற்றும் கமர்சியல் ரீதியான டிவிட்டர் பக்கங்களுக்கு கட்டணம் எவ்வளவு என்பதை அவர் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 







 
 










டிவிட்டரில் போலி கணக்குகள்: 
டிவிட்டரில் 20 - 50 % போலி கணக்குகள் இருப்பதாகவும் அதை  கணக்குகளை முடக்க உள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். ஆனால் டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால்,  5%குறைவாகவே போலி கணக்குகள் உள்ளதாக தெரிவித்திருந்தார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது என தெரிகிறது. அதோடு சிஇஓ பராக் அகர்வாலை அவமதிக்கும் வகையிலும் எலான் மஸ்க் பதிவு ஒன்றை போட்டுள்ளார். 
 
இந்நிலையில் இதனைத்தொடர்ந்து டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் 5%  குறைவாக போலி கணக்குகள் இருக்கிறது என்பதன் ஆதாரத்தை பொதுவெளியில் வெளியிட மறுத்துவிட்டார். அதை அவர் நிரூபிக்கும் வரை டிவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்