நாத்திகத்தை பரப்பியவருக்கு 15 ஆண்டுகள் ஜெயில்: சவுதி அரேபியா நீதிமன்றம் அதிரடி

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (16:38 IST)
நாத்திகத்தை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
தீவிர மத கோட்பாடுகளும் கொண்ட நாடுகளில் ஒன்று சவுதி அரேபியா என்பதும் இங்கு மதத்தை நிந்திப்பது நாத்திகம் பேசுவதும் தீவிர குற்றமாகப் பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஏமன் நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கம் மூலம் மத எதிர்ப்பு கருத்துக்களை பதிவு செய்ததாகவும் இதனை அடுத்து அவர் மீது வழக்குத் தொடுத்த சவுதி அரேபியா நீதிமன்றம் அவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது 
 
இந்த தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்த போதிலும் சவுதி அரேபிய அரசு பின் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாத்திகத்தை பரப்பிய ஒருவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்