பிரேசில் நாட்டை உலுக்கிய புயல்- 13 பேர் பலி

Webdunia
திங்கள், 19 ஜூன் 2023 (21:42 IST)
பிரேசில் நாட்டில் ஷியோகிராண்ட் டொசூல் என்ற மாநிலத்தில் வீசிய கடும் சூறாவளி  காற்றுடன் மழை பெய்தது.

இந்த சூறாவளியால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன, அங்கிருந்த நூற்றுக்கணக்கான மரங்களும் வேரோடு சாய்ந்ததாக கூறப்படுகிறது.

கனமழையால் அங்குள்ள சாலைகளில்  நீர் சூழ்ந்து, பள்ளமான பகுதிகளில் இருந்த வீடுகளுக்குள் நீர் புகுந்து மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற  மீட்புப் படையினர், வெள்ளத்தில் சிக்கிய 3,313 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்த புயலால் 4 மாதக் குழந்தை உட்பட 13 பேர்  உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என்றும்,  ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்