பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹவல்பூர் நகரில் எண்ணெய் டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனால், லாரியிலிருந்து எண்ணெய் சாலையில் ஆறாக ஓடியது. இந்த விபத்து குறித்து அறிந்த அப்பகுதி கிராம மக்கள் எண்ணெய் அள்ள லாரியை முற்றுகையிட்டனர்.
100-க்கும் அதிகமான மக்கள் லாரியிலிருந்து வெளியேரிய எண்ணெயை அள்ளிக்கொண்டிருக்கும் போது, எதிர்பாராதவிதமாக லாரி தீப்பிடித்து எரிந்தது.
இதனால், லாரியைச் சுற்றியிருந்த 120 பேர் உடல்கருகி பலியாகினர். சுமார் 75 பேர் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், விபத்தின் போது அருகே இருந்த 6 கார்கள் மற்றும் 12 பைக்குகள் எரிந்து நாசமானதாகவும் தெரியவந்துள்ளது.