இந்தி மொழி தான் இந்தியர்களின் அடையாளம் என மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார். இது மற்ற மொழி மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு இந்தி மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வருவதற்கு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தி மொழி இந்தியர்களின் அடையாளம் என மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ஹிந்தி நம் தேசிய மொழி. ஹிந்தி மொழி இந்தியர்களின் அடையாளம். இந்தி இல்லாமல் இந்தியாவில் முன்னேற முடியாது என தெரிவித்தார்.