அட்டர் பிளாப்பான டெர்மினேட்டர் – 100 மில்லியன் டாலர் நஷ்டம் ?

Webdunia
செவ்வாய், 5 நவம்பர் 2019 (13:51 IST)
சமீபத்தில் வெளியான டெர்மினேட்டர் படத்தின் ஆறாவது பாகமான டார்க் பேட் படம் படுதோல்வியை அடைந்துள்ளது.

டெர்மினேட்டர் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை இயக்கிவர் ஜேம்ஸ் கேமரூன். இதில் முதல் பாகத்தில் வில்லனாகவும், இரண்டாம் பாகத்தில் ஹீரோவாகவும் நடித்திருப்பார் அர்னால்டு. டெர்மினேட்டர் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை இயக்கிவர் ஜேம்ஸ் கேமரூன். இதில் முதல் பாகத்தில் வில்லனாகவும், இரண்டாம் பாகத்தில் ஹீரோவாகவும் நடித்திருப்பார் அர்னால்டு. 

இந்நிலையில், டிம் மில்லெர் என்ற இயக்குனர் இயக்க, அர்னால்டு நடிக்கும் டெர்மினேட்டர் படத்தின் 6 ஆவது பாகமான  டார்க்பேட் படத்தை ஜேம்ஸ் கேமரூன் திரைக்கதை எழுதினார். உலகம் முழுவதும் பரவலான எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியான இந்தப் படம் ரசிகர்களை திருப்தி படுத்தாததால் படுதோல்வி அடைந்துள்ளது.

இந்தப் படத்தின் தயாரிப்பு செலவு சுமார் 185 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இது தவிர படத்தின் விளம்பரங்களுக்காக மட்டும் ஏறக்குறைய 100 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டது. ஒட்டுமொத்தமாக போட்ட முதலை திருப்பி எடுக்க இந்தப் படம் 450 மில்லியன் டாலர்களை வருவாயாக ஈட்டவேண்டும். ஆனால் உலக அளவில் 200 மில்லியன் டாலர்களே இந்தப் படம் வசூலிக்கக் கூடும் என சொல்லப்படுகிறது. இதனால் தயாரிப்பு நிறுவனத்திற்கு சுமார் 100 மில்லியன் டாலர்கள் நஷ்டம் ஏற்படும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்