மகளிர் தினம் கொண்டாடும் வேளை பெண்ணுக்குள் கேள்விகள் ஆயிரம்!

Webdunia
செவ்வாய், 3 மார்ச் 2020 (17:16 IST)
மகளிர் தினம் கொண்டாடும் வேளை பெண்ணுக்குள் கேள்விகள் ஆயிரம்!
18ஆ‌ம் நூ‌ற்றா‌ண்டி‌ல் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். மகளிர் வீட்டு வேலைகளை செ‌ய்யு‌ம் பொரு‌ட்டு வீடுகளில் முட‌க்‌கி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தன‌ர். பெரு‌ம்பாலான பெ‌ண்களு‌க்கு ஆரம்பக் கல்வி கூட  மறு‌க்க‌ப்ப‌ட்டது. மரு‌த்துவமு‌ம், சுத‌ந்‌திரமு‌ம் எ‌ன்னவெ‌ன்று தெரியாத காலமும் உண்டு.
 
 
1921ம் ஆண்டு முதல் உலக மகளிர் தினத்தைக் கொண்டாடத் தொடங்கினர். அ‌ன்று முத‌ல் இ‌ன்று வரை ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் மா‌ர்‌ச் 8ஆ‌ம் தே‌தியை நா‌ம் மக‌ளி‌ர் ‌தினமாக‌க் கொ‌ண்டாடி வரு‌கிறோ‌ம்.
 
பெண்கள் உரிமை எனப் பலரால் பேசப்பட்டாலும் பெண்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அடக்கப்படுவதும், ஆபாச பொருளாக  பார்க்கப்படுவதும் வீடுகளிலும் பொது இடங்களிலும் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதும் பொருளாதார, அரசியல், சமூக  நிலைகளில் ஒதுக்கப்படுவதும் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 
 
இந்தியாவுக்கு அகிம்சை வழியில் சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்த மகாத்மாகாந்தி அவர்கள் ‘எப்போது எமது நாட்டில் பெண்கள் நல்லிரவிலும் நடமாடக்கூடிய சூழ்நிலை உருவாகின்றதோ அப்போதே உண்மையான சுதந்திரம் உருவாகும்’ என்றார். இதே  போன்று ‘பெண் அடிமை தீரும் மட்டும் மண் விடுதலை என்பது முயற்கொம்பே’ என்றார் பாவேந்தர் அவர்கள்.
 
பெண் என்பதற்கு தாய்மை எனும் இன்னுமொரு பொதுப்பெயரும் உண்டு. பெண்ணால் மட்டுமே தாய்மை அடையும்  பெருமையும் உண்டு. இதனால்தான் தாய்மண், தாய்நாடு, தாய்மொழி, என்றெல்லாம் பெண்ணின் இலக்கணம் பெருமை  சேர்த்துள்ளது.
 
மகளிர் தினம் கொண்டாடிக் கொண்டிருக்கையில், எங்கோ ஒரு மூலையில் கூலி வேலை செய்து கொண்டிருக்கும்  கிராமப்பெண்ணிற்கு மகளிர் தினம் என்றால் என்ன என்று தெரியாத நிலையில்தான் இன்னமும் இருக்கிறோம். நம்மில்  பெரும்பாலோர் இன்னமும் அனைத்து உரிமைகளும் கிடைத்து விட்டதா... என்றால், அவை இன்றும் கேள்விக்குறியாகதான்  இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்